திமுக எம்பி ராசா வாயால் வந்த வினை | Perambalur | DMK-VCK clash| 4 functionaries injured
திமுக எம்பி ராசா வாயால் வந்த வினை | Perambalur | DMK-VCK clash| 4 functionaries injured பெரம்பலூர் குன்னம் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த விசிக தரப்பில் போலீசில் அனுமதி கேட்கப்பட்டது. அதே போல் திமுக தரப்பிலும் விசிகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. இருதரப்புக்கும் போலீசார் அனுமதி மறுத்தனர். போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் விசிகவினரும் திமுகவினரும் தடையை மீறி குன்னம் மெயின் ரோட்டில் கூடினர். இதில் விசிக மற்றும் திமுகவினர் ஒருவரை ஒருவர் கற்கள், உருட்டுக்கம்புகளை வீசி தாக்கி கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து கார்களில் ஏறி மின்னல் வேகத்தில் ஸ்பாட்டை விட்டு எஸ்கேப் ஆகினர். போலீசார் இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினர். இதில் திமுக மற்றும் விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் பதட்டம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.