உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / இலவச தையல் பயிற்சி துவக்க விழா

இலவச தையல் பயிற்சி துவக்க விழா

மதுரை பன்னியான் கிராமம் கூட்ட அரங்கில் GHCL பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் தொண்டு நிறுவனம் சார்பில் பெண் தொழில் முனைவோர்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது. பன்னியான் ஊராட்சி தலைவர் காசிநாதன் தலைமை வகித்தார். பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக GHCL பவுண்டேஷன் CSR அதிகாரி சுஜின் பங்கேற்று பேசினார். பயிற்சிக்கு பின் பெண்கள் சுய தொழில் துவங்க வங்கிக்கடன் பெற்றுக் கொடுக்கப்படும். தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என பெட்கிராட் நிறுவனம் உறுதியளித்தது. பயிற்சியாளர்கள் சித்ராதேவி மற்றும் சத்யா நன்றி கூறினர். விழாவில் பெட்கிராட் தலைவர் கிருஷ்ணவேணி, செயலாளர் சாராள் ரூபி, பயிற்சியாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயிற்சியாளர் தீபா நன்றி கூறினார்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ