தினமலர் வழிகாட்டி கல்வி நிகழ்ச்சி - 2025 நிறைவு பெற்றது | Dinamalar Valikatti - 2025
தினமலர் வழிகாட்டி கல்வி நிகழ்ச்சி - 2025 நிறைவு பெற்றது / Dinamalar Valikatti - 2025 / Thamukkam Ground / Madurai ப்ளஸ் 2வுக்கு பின் உயர் கல்வியில் என்ன படிப்புகளை தேர்வு செய்யலாம், எங்கு படிக்கலாம் என பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து வழங்கிய தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை தமுக்கம் அரங்கில் கடந்த 26 ம் தேதி கோலாகலமாக துவங்கியது. ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் எதிர்கால நலன் கருதி கல்வி, வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான இலவச நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தாண்டிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை தமுக்கம் அரங்கில் கடந்த புதன் கிழமை துவங்கியது. இன்று மாலை நிறைவடைந்தது. நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக கல்வி கண்காட்சியுடன் கருத்தரங்குகள் இடம் பெற்றன. இன்று நடந்த மூன்றாம் நாள் நிறைவு கருத்தரங்கில் ‛மீடியா அனிமேஷன் வி.எப் .எக்ஸ். கேமிங் பற்றி மதுரை எஸ்.எல் .சி. எஸ். கல்லூரி பேராசிரியர் கிஷோர் குமார், ‛கலை அறிவியல் பற்றி எஸ்என்ஆர் கல்லூரி முதல்வர் சித்ரா, ‛நுழைவுதேர்வுகள், உதவித் தொகை குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன், ‛தொழிற்சாலையின் தேவைகள் பற்றி மகேந்திரா தினேஷ் வேணுகோபால், ‛சைபர் செக்யூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங் பற்றி மதுரை எஸ்.எல்.சி.எஸ். பேராசிரியர் தினேஷ் பரந்தகன், ‛கல்விக்கடன் பற்றி வங்கியாளர் விருத்தாசலம் மற்றும் ‛வேலை தரும் படிப்புகள் பற்றி கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா பேசினர். கருத்தரங்கில் நீட், ஜெ.இ.இ., நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான டிப்ஸ், ரோபோட்டிக்ஸ் அன்ட் அட்டோமேஷன், ஓபன் ஏ.ஐ., குவாண்டம் கம்ப்யூட்டிங், ஐ.ஓ.டி., எனும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், கம்ப்யூட்டிங், கடல்சார் படிப்புகள். மெட்டாவர்ஸ், சி.எஸ்., ஐ.டி., டேட்டா சயின்ஸ், பிக் டேட்டா, மிஷின் லேர்னிங், கலை அறிவியல் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் என்ன. மருத்துவம், துணை மருத்துவ படிப்புகளும் வாய்ப்புகளும், சட்டம், சி.ஏ., படிப்பதால் என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் விபரம். பிரத்யேக கல்வி நிறுவனங்கள் விபரம், கல்வி நிறுவனங்களில் உள்ள ஏராளமான கல்விப் பிரிவுகள், வேலைவாய்ப்பு தரும் படிப்புகள் குறித்து 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் நேரடி ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள் என 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து அங்கேயே கேட்டு தெரிந்து கொண்டனர். கல்லுாரிகளுக்கான விண்ணப்பம் முதல் மாணவர்கள் சேர்க்கை வரையிலான அனைத்து நடைமுறைகளும், கல்விக் கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட அனைத்து தகவல்கள், ஆலோசனைகள் ஒரே இடத்தில் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்லுாரிகளைத் தேடி மாணவர்கள், பெற்றோர் அலைவதை தவிர்க்கலாம். இந்நிகழ்ச்சிக்கு பவர்ட் பை பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் செயல்படுகிறது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி. கே.எம்.சி.எச்., அன்ட் டாக்டர் என்.ஜி.பி., நிறுவனங்கள், கோவை எஸ்.என்.எஸ்., இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ். ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ஸ் ஆஃப் இந்தியா ஆகியன இணைந்து வழங்குகின்றன வழிகாட்டி நிகழ்ச்சியில் கேள்விக்கு சரியான பதில் மற்றும் சிறந்த ஸ்லோகன் எழுதிய மாணவ, மாணவிகளுக்கு காலை மற்றும் மதிய அமர்வுகளில் ஸ்மார்ட் வாட்ச் தலா 5 பேருக்கும், ரெட்மி டேப் தலா ஒருவருக்கும் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவர்கள் சரியாக பதிலளித்து பரிசுகளை அள்ளி சென்றனர். மாணவ செல்வங்களின் எதிர்கால நலன் கருதி அரிய வாய்ப்பை வழங்கிய தினமலர் மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்களின் கல்வி சேவை போற்றுதலுக்குரியது என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமிதம் கொண்டனர்.