உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரையில் நாய்கள் பெருக்கம் தடுக்க மாநகராட்சி அதிரடி | Dog shelter | Madurai Corporation | Madurai

மதுரையில் நாய்கள் பெருக்கம் தடுக்க மாநகராட்சி அதிரடி | Dog shelter | Madurai Corporation | Madurai

மதுரையில் நாய்கள் பெருக்கம் தடுக்க மாநகராட்சி அதிரடி / Dog shelter / Madurai Corporation / Madurai மதுரை மாநகராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. மாநகராட்சி சார்பில் நாய்களுக்கு கருத்தடை செய்யாததால் நாய்களின் எண்ணிக்கை பெருகி நாய்க்க கடிக்கு ஆளாவோர் அதிகரித்து வருகின்றனர். மதுரையில் தினமும் சராசரியாக 19 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை 2,788 பேர் நாய் கடிக்கு ஆளாகி, அரசு ராஜாஜி ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுள்ளனர். மதுரை செல்லூர் மற்றும் வெள்ளக்கல் பகுதிகளில் நாய் காப்பகம் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் மையம் செயல்பட்டு வருகிறது . இங்கு முன்பு இருந்த தன்னார்வலர் அமைப்பு புகார் அடிப்படையில் மாதம் 500 நாய்களை பிடித்து அதற்கு கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விட்டு வந்தன. நாய்களால் ஏற்படும் பிரச்சினை பெரிதாகி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பத் தொடங்கினர். நாய்களைக் கட்டுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் உறுதி அளித்தார். எனினும் நடைமுறை சிக்கல்களால் பயனில்லாமல் போனது. இதற்கு நிரந்தர தீர்வாக மதுரை தல்லாகுளம் தங்கராஜ் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் 35 லட்சம் மதிப்பீட்டில் புதிய நாய் காப்பகம் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணி நிறைவு பெறும் பட்சத்தில் நாய்களுக்கு கு.க. ஆப்ரேஷன், ரேபிஸ் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த இயலும் என மாநகராட்சி கருதுகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சியின் 100 வார்டுகளில் 38,438 நாய்கள் வசிப்பது கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. வெள்ளைக்கல் மற்றும் செல்லூர் காப்பகத்தில் 80 நாய்கள் வரை மட்டுமே பராமரிக்க முடியும். நாய் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த புதிய காப்பகத்தில் 100 நாய்கள் வைத்து பராமரிக்க வசதி செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அளிக்கும் புகார் அடிப்படையில் நாய்கள் பிடிக்கப்பட்டு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் தகுதியான நாய்களுக்கு கருத்தடை செய்து பாராமரிக்கப்பட்டு மீண்டும் அதே இடத்தில் விடப்படும் என தெரிவித்தார்

அக் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை