/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மின் ஊழியரை தாக்கிய தந்தை, மகனை கைது செய்ய வலியுறுத்தல் | Attack on EB worker
மின் ஊழியரை தாக்கிய தந்தை, மகனை கைது செய்ய வலியுறுத்தல் | Attack on EB worker
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய கேங்மேன் ஸ்ரீகுமார். இவர் எ.புதுப்பட்டி கிராமத்தில் மாயி என்பவரது வீட்டு மின் இணைப்புக்கு மின் கட்டணம் செலுத்தாததால் அவரது வீட்டின் மின் இணைப்பை துண்டித்தார். ஆத்திரமடைந்த மாயி, அவரது மகன் சூரியபிரகாஷ் ஆகியோர் ஶ்ரீகுமாரை தாக்கினர். தந்தை, மகன் மீது உதவி மின்பொறியாளர் உத்தப்பநாயக்னூர் போலீசில் புகார் செய்தார். தாக்குதல் நடத்திய தந்தை, மகனை கைது செய்யக்கோரி மின்வாரிய அனைத்து சங்க பணியாளர்கள் உசிலம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிப் 20, 2024