உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / விமான பயணிகளுக்கு தெர்மல் கேமரா பரிசோதனை

விமான பயணிகளுக்கு தெர்மல் கேமரா பரிசோதனை

விமான பயணிகளுக்கு தெர்மல் கேமரா பரிசோதனை | District Health Officer information regarding Ebola virus test | Airport | Madurai பழம் தின்னி வவ்வால்கள் மூலம் எபோலா வைரஸ் தொற்று பரவுகிறது. இது மனிதன் மற்றும் விலங்குகளின் உடலில் ரத்தம் உறைதல் அமைப்பை பாதித்து கடுமையான ரத்தக்கசிவை ஏற்படுத்துகிறது. இறுதியில் உயிரிழப்பு வரை கொண்டு செல்லும் ஒரு அதிபயங்கர உயிர்க்கொல்லி நோயாகும். தென்னாப்பிரிக்க நாடுகளான காங்கோ, தெற்கு சூடான், உகாண்டா நாடுகளில் எபோலா வைரஸால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மதுரை ஏர்போர்ட்டிற்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளுக்கு தெர்மல் கேமரா மூலம் காய்ச்சல் உள்ளதா என கடந்த மே 17ம் தேதி முதல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மதுரை வரும் விமான பயணிகள் 1169 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பொற்செல்வன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், பயணிகளுக்கு காய்ச்சல் இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு முகவரி, வெளிநாட்டு பயண விவரங்கள் சேகரிக்கப்பட்டு வீடுகளுக்கு திரும்ப அனுப்பப்படுகின்றனர். மதுரையில் நேற்று 13 பேர் காய்ச்சலால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டனர். அரசு, தனியார் ஹாஸ்பிடலில் குழந்தைகள் உட்பட 52 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று ஏதும் பதிவாகவில்லை என்றார்.

மே 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை