உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திருமங்கலம் அதிமுக வேட்பாளர் உதயகுமார் பரப்புரை வாகனம் அடுத்தடுத்து சோதனை |Election Flying squad ve

திருமங்கலம் அதிமுக வேட்பாளர் உதயகுமார் பரப்புரை வாகனம் அடுத்தடுத்து சோதனை |Election Flying squad ve

தமிழ்நாடு சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளை கண்காணிக்க 90 பறக்கும் படை மற்றும் நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிராமங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே அவரது திருமங்கலம் அம்மா கோயிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் 5 முறை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இன்று காலை கள்ளிக்குடி ஒன்றியம் மைத்தான்பட்டி கிராமத்தில் உதயகுமார் கூட்டணி கட்சியினருடன் இணைந்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அங்கு வந்த பறக்கும்படையினர் உதயகுமார் வாகனத்தை நிறுத்தி பணம் அல்லது பரிசு பொருள் ஏதும் இருக்கிறதா? என சோதனையிட்டனர். ஆனால் ஏதும் கிடைக்கவில்லை. எதிர்கட்சிகளை முடக்குவதற்காகவே பறக்கும்படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபடுவதாக அதிமுக தரப்பினர் குற்றம் சாட்டினர். #Thirumangalam #DMK #Madurai #Electioncampaign #ADMK #Flyingsquad #tamilnadu #Election #RBudhyakumar

மார் 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி