உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / 25 இலவச விவசாய மின் இணைப்பு துண்டிப்பு | Irregularity in free agricultural electricity connection

25 இலவச விவசாய மின் இணைப்பு துண்டிப்பு | Irregularity in free agricultural electricity connection

25 இலவச விவசாய மின் இணைப்பு துண்டிப்பு | Irregularity in free agricultural electricity connection | Madurai தமிழக மின் வாரியம் சார்பில் விவசாய பயன்பாட்டிற்காக தட்கல் திட்டத்தின் கீழ் இலவச மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து மின் வாரியத்திடம் கொடுக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் மேலுார் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்பு கேட்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்தனர். இலவச மின் இணைப்பு கொடுக்க கீழையூர் மின் வாரிய உதவி பொறியாளர் ராம்குமார் மற்றும் போர்மேன் முத்துராமன் ஆகியோர் விவசாயிகளை அணுகி தலா 3 லட்சம் ரூபாய் பெற்றதாக தெரிகிறது. பணம் கொடுத்த விவசாயிகளுக்கு அடுத்தடுத்து இலவச மின் இணைப்பு கொடுத்தனர். தேவையான இடங்களில் மின் கம்பங்கள் ஊன்றப்பட்டன. ஆனால் இலவச மின் இணைப்பிற்கான மீட்டர் பொருத்தவில்லை. இதுகுறித்து விவசாயிகள் கேட்டதற்கு இலவச மின்சாரத்திற்கு மீட்டர் தேவையில்லை என கூறி உதவி பொறியாளர் மற்றும் போர்மென் சமாளித்தனர். அவர்கள் சொல்வதை விவசாயிகள் நம்பினர். கடந்த நான்கு ஆண்டுகளாக இலவச மின்சாரத்தை பயன்படுத்தி விவசாய பணிகளில் கீழையூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். கடந்த 7 ம் தேதி கீழையூர் பகுதியில் மின் வாரிய அமலாக்கத்துறையினர் இலவச மின் இணைப்புகளை ஆய்வு செய்தனர். அதில் 25 க்கும் மேற்பட்ட இணைப்புகள் முறைகேடாக கொடுக்கப்பட்டதாக கூறி மின் இணைப்பை துண்டித்தனர். பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

ஜூன் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை