ஆகஸ்ட் 22ல் கும்பாபிஷேகம் | Temple Festival | Manamadurai
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் புகழ்பெற்றது. இக்கோயிலின் கும்பாபிஷேகத் திருப்பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கோயில் திடலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக முகூர்த்தக் காலுக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று கோயிலை வலம் வந்து முகூர்த்தக்கால் நடும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்த பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜூலை 07, 2024