மதுரை மத்திய தொகுதி என்டிஏ வேட்பாளரை மாற்ற வலியுறுத்தல்
மதுரை மத்திய தொகுதி என்டிஏ வேட்பாளரை மாற்ற வலியுறுத்தல் | Ex ADMK councillor Against the candidate Sundar C | Central constituency Winning Chances to the DMK Minister Thiyagarajan | Madurai தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சி இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு மதுரை மத்தியத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதன் வேட்பாளராக திரைப்பட நடிகர் மற்றும் டைரக்டர் சுந்தர் சி களம் இறக்கப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். ஆனால், அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே என்டிஏ கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் அதே தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவும், அமைச்சருமான தியாகராஜன் மீண்டும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அமைச்சருக்கு சரியான போட்டி வேட்பாளர் சுந்தர் சி இல்லை என என்டிஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மதுரை எஸ்.எஸ் காலனி 61வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் லட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேலும் மத்திய தொகுதியை 10 ஆண்டுகளாக கட்டுக்கோப்பாக நடத்தி வரும் அமைச்சர் தியாராஜனுக்கு போட்டி வேட்பாளர் சுந்தர் சி இல்லை. எனவே அமைச்சருக்கு போட்டியாக வலுவான வேட்பாளரை களம் இறக்க வேண்டும் என என்டிஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சுந்தர் சி வருகை திமுகவிற்கு மத்திய தொகுதியை தாரைவார்த்து கொடுத்தது போல் ஆகிவிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.