முன்னாள் அமைச்சர் உதயகுமார் தாக்கு | Ex minister Udhayakumar | tungsten issue | Madurai
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவர் ஆராதனை விழா எஸ்.எஸ். காலனி பிராமண கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார். விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மதுரை வைதிக சமாஜம் ஆலோசகர் அருணாசல வாத்யார், பேச்சாளர் கலைமாமணி நாகை முகுந்தன், எழுத்தாளர் திருமலை, ஆன்மிக கட்டுரையாளர் ஆரணி பவித்ரா நந்தகுமார் மற்றும் சமூக ஆர்வலர் பாலா ராமச்சந்திரன் ஆகியோருக்கு ஸ்ரீ மஹா பெரியவர் விருதை முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார். தொடர்ந்து கலைமாமணி நாகை முகுந்தன் கோதையும் கோபாலனும் எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். தொடர்ந்து நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினரின் ஆண்டாள் கல்யாணம் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது. மஹா பெரியவர் ஆராதனை வைபவத்தை முன்னிட்டு வரும் 27 ம் காலை 9 மணிக்கு காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், மகன்யாஸம், புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு அர்ச்சனை நடக்கிறது. பிரார்த்தனைகளுக்காக அர்ச்சனையில் பங்குபெற்று பிரசாதம் பெற்றுக் கொள்ள விரும்பும் பக்தர்கள் 500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.