உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை தல்லாகுளம் பகுதியில் குவிந்த விவசாயிகள் |Tungsten Mining | Farmers motorcade Protest | Madurai

மதுரை தல்லாகுளம் பகுதியில் குவிந்த விவசாயிகள் |Tungsten Mining | Farmers motorcade Protest | Madurai

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாயக்கன்பட்டி, அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஐந்தாயிரம் ஏக்கரில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஏலம் எடுத்துள்ளது. ஏலத்தை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி 48 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ரவி, குறிஞ்சி குமரன், இளங்கோ, அசோக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேலுார் நரசிங்கம்பட்டியில் இருந்து வாகன பேரணியாக மதுரை தல்லாகுளம் தலைமை போஸ்ட் ஆபீஸ் வந்தனர். தலைமை போஸ்ட் ஆபீஸ் எதிரே தமுக்கம் ரோட்டில் இரும்பு தடுப்புக்களை வைத்து போலீசார் தடை ஏற்படுத்தினர். ஆத்திரமடைந்த விவசாயிகள் இரும்பு தடுப்புக்களை துாக்கி வீசினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடைகளை தகர்த்து போஸ்ட் ஆபீஸ் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தால் தல்லாகுளம் ரோட்டில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. நீண்ட நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 48 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள்

ஜன 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி