மதுரை பெண்கள் விடுதியில் அதிகாலையில் நடந்த சோகம் | Fire Accident | 2 teacher's death | Madurai
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டாரபாளைம் பகுதியில் விசாகா பெண்கள் விடுதி உள்ளது. இங்கு 40 க்கும் மேற்பட்டோர் தங்கி வருகின்றனர். இன்று அதிகாலை பழைய பிரிட்ஜ் ஒன்று வெடித்து தீ பற்றியது. அதிகாலை 4.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தால் பலர் அலறியடித்து வெளியேறினர். தீ மளமளவென பரவி அப்பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்ததால் மூச்சு திணறலும் ஏற்பட்டது. தப்பி வெளியே வந்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஸ்பாட்டுக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளே சிக்கியவர்களை மீட்டு அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். சோக சம்பவமாக சிகிச்சை பலனின்றி அரசு பள்ளி ஆசிரியை பரிமளம் மற்றும் மற்றொரு ஆசிரியை சரண்யா ஆகியோர் இறந்தனர். 3 பெண்கள் தீக்காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். சம்பவம் குறித்து திடீர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.