ஜி .ஹெச்.சி .எல். மற்றும் பெட்கிராட் சேவை நிறுவனம் ஏற்பாடு | Free multi skill vocational training
ஜி .ஹெச்.சி .எல். மற்றும் பெட்கிராட் சேவை நிறுவனம் ஏற்பாடு | Free multi skill vocational training | GHCL Foundation Trust, FEDCROT | Madurai மதுரையில் ஸ்ரீமீனாட்சி மில்ஸ் ஜி.ஹெச்.சி.எல். பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் சேவை நிறுவனம் சார்பில் கிராம பெண்களின் பொருளாதார முன்னேற்றம் கருதி பல்திறன் தொழில் பயிற்சிகளை இலவமாக வழங்கி வருகிறது. இதில் கம்ப்யூட்டர், தையல், சணல், ஹேண்ட் எம்ராய்டிங் உள்ளிட்ட எண்ணற்ற பயிற்சிகள் சிறந்த வல்லுனர்களால் தொடர்ந்து இலவசமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு பின் சுய தொழில் துவங்கவும், வங்கிக்கடன் பெற்று தரவும் ஏற்பாடு செய்கின்றனர். இதன் மூலம் ஏராளமான பெண்கள் சுய தொழில் முனைவோர்களாக மிளர்கின்றனர். இதன் ஒரு பகுதியாக தனிச்சியம் மற்றும் திருவாலவாயநல்லூர் கிராமங்களில் ஹேண்ட் எம்ராய்டிங், ஆரி ஒர்க் மற்றும் தையல் பயிற்சி துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவாலவாயநல்லூர் ஊராட்சி தலைவர் ஜாகுபர் சாதிக் தலைமை வகித்தார். பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம், தனிச்சியும் ஊராட்சி துணைத் தலைவர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். பெட்கிராட் பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார்.