தமிழகத்தை உலுக்கிய துயரம்; நடந்தது என்ன? போலீஸ் எஸ்பி தேவநாதன்
தமிழகத்தை உலுக்கிய துயரம்; நடந்தது என்ன? போலீஸ் எஸ்பி தேவநாதன் | The Friend who Finished the Boys Story | Melur | Madurai மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் - சத்யா ஆகியோரின் மூன்றாவது மகன் 7 வயது முத்துவேலன். பெரியகருப்பன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். கடந்த 25ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் முத்துவேலன் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் பயனில்லை. இதற்கிடையே அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டில் நேற்று காலை சிறுவன் சடலமாக கிடந்தார். சிறுவன் சாவில் மர்மம் இருப்பதால் போலீஸ் எஸ்பி தேவநாதன் மேற்பார்வையில், மேலுார் டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் 5 தனிப்படை அமைத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. byte: தேவநாதன் போலீஸ் எஸ்பி., மதுரை 00:14 - 05:00 (mdu print) சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கொலைக்கான காரணம் குறித்து கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.