1,100 கிராம் கஞ்சா, மொபைல் போன் பறிமுதல் | Madurai Crime
மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் டிவிஎஸ் நகர் மீனாட்சி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் திரிந்தவரிடம் விசாரித்தனர். அவர் டிவிஎஸ் நகரை சேர்ந்த விஜய், வயது 34 எனவும், மாணவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதை ஒப்புக் கொண்டார். மேலும் செல்லுாரை சேர்ந்த லட்சுமணன், அழகப்பன்நகர் பாண்டியன் தெருவை சேர்ந்த கீனா என்ற கிருஷ்ணகுமார், தெற்குவாசல் சப்பானி கோயில் தெருவை சேர்ந்த சாய் பிரசாத் ஆகியோரிடம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ததாக விஜய் கூறினார். நால்வர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விஜய் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1,100 கிராம் கஞ்சா மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. லட்சுமணன், கிருஷ்ணமூர்த்தி மற்றம் சாய் பிரசாத்தை தேடுகின்றனர். சாய் பிரசாத் திமுகவை சேர்ந்தவர். இவரது உறவினர் மதுரை தெற்கு பகுதி திமுக மாணவரணி நிர்வாகி. தெற்கு பகுதி திமுக மாணவரணி பதவியை பெற சாய் பிரசாத் கட்சி தலைமையிடம் விண்ணப்பித்திருப்பதாக கட்சி வட்டார தகவல் தெரிவிக்கிறது.