உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல் | Petition against Judge GR Swaminathan dismissed | VHP Emphasis

விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல் | Petition against Judge GR Swaminathan dismissed | VHP Emphasis

விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல் | Petition against Judge GR Swaminathan dismissed | VHP Emphasis | Madurai உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமி நாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி இண்டி கூட்டணி எம்பிகள் கொடுத்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பாரம்பரியமிக்க தீபத் தூணில் திருக்கார்த்திகை முன்னிட்டு தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவில் எந்த குறையும் கூற முடியாது. ஆனால் சிறுபான்மையினர் ஓட்டு வங்கி அரசியல் செய்யும் இண்டி கூட்டணி எம்பிகள் நீதிபதியை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு அளித்துள்ளது. இது நீதித்துறைக்கு விடப்பட்ட அச்சுறுத்தலாக உள்ளது. முக்கியமான வழக்குகளில் இனி நீதிபதிகள் சட்டத்துக்கு உட்பட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாத சூழ்நிலையையும் ஏற்படுத்தும். இண்டி கூட்டணி மனுவை சபாநாயகர் தள்ளுபடி செய்ய வேண்டும். நீதிபதி உத்தரவின் படி திருப்பரங்குன்றம் தீபத்துணில் தீபம் ஏற்ற தமிழக அரசுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை தமிழகத்தில் நிலை நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிச 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை