உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / முக்கிய சாலைகளில் கடும் டிராஃபிக் ஜாம் | Madurai | Heavy rain in Madurai |Heavy traffic

முக்கிய சாலைகளில் கடும் டிராஃபிக் ஜாம் | Madurai | Heavy rain in Madurai |Heavy traffic

வடகிழக்கு பருவமழை தமிழக முழுவதும் பரவலாக செய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக அதிகப்படியான கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மதுரை நகரில் தினமும் மாலை வேளையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழை நீர் தாழ்வான பகுதிகளில் தெப்பம் போல் தேங்கி நிற்கிறது. பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணி அளவில் தல்லாகுளம், தமுக்கம் மைதானம், கோரிப்பாளையம், சிம்மக்கல், அண்ணா பேருந்து நிலையம், எம்ஜிஆர் பேருந்து நிலையம் உள்ளிட்ட கனமழை கொட்டி தீர்த்தது. முக்கிய சாலைகளில் முழங்கால் அளவு மழை நீர் சூழ்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை விட்டதும் வாகன ஓட்டிகள் ஒரே நேரத்தில் கிளம்பியதால் பல மணி நேரம் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. 

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை