உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தேனீ வளர்ப்பில் மண்சட்டி வைத்து புதிய முயற்சி | A new initiative in beekeeping in a clay pot | Madur

தேனீ வளர்ப்பில் மண்சட்டி வைத்து புதிய முயற்சி | A new initiative in beekeeping in a clay pot | Madur

தேனீ வளர்ப்பில் மண்சட்டி வைத்து புதிய முயற்சி | A new initiative in beekeeping in a clay pot | Madurai தேனீ வளர்ப்புக்கு மண் சட்டி போதும் காட்டுத் தேனீக்களை ஈர்க்கும் நியூ டெக்னிக் குறைந்த செலவில் அதிக லாபம் பெட்டி செலவில்லாமல் எளிய முறையில் தேனீ வளர்ப்பு ........ இந்தியாவில் தேனீ வகைகளான இந்திய தேனீ, இத்தாலிய தேனீ, மலைத் தேனீ, சிறு தேனீ, கொசுத் தேனீ என மொத்தம் ஐந்து வகையான தேனீக்கள் காணப்படுகிறது. அதில் இந்திய தேனீ, இத்தாலிய தேனீ பெட்டிகளில் வைத்து வளர்க்கப்படுகிறது. இவை தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவுகிறது. இந்தத் தேனீக்கள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடப்பதால் பயிர்களின் தரம் மற்றும் விளைச்சல் 20% முதல் 40% வரை அதிகரிக்கிறது. இதனை பெட்டிகளில் வைத்து வளர்க்க விவசாயிகள் ஒரு பெட்டிக்கு 2000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. பெட்டி வளர்ப்புக்கு பதிலாக இந்தியத் தேனீக்களின் காட்டுக் கூட்டங்களை ஈர்த்து குடியேறச் செய்வதில் எளிய சுடுமண் பானை தொழில்நுட்பத்தை, சிவகங்கை மாவட்ட வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கண்டுபிடித்துள்ளது. இந்தியத் தேனீ இனங்களான ஏபிஸ், செரானா, இண்டிகா போன்றவை வளர்க்க மற்றும் தேனீக்களை பெருக்க இயற்கையாகக் கூடு அமைக்கும் பொந்துகளை ஒத்திருக்கும் களிமண் பானைகள் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. சுடுமண் பானைகளில் தேனீக்கள் வளர்ப்பதன் மூலம் மா, கொய்யா, சப்போட்டா, மாதுளை மரங்கள், பயறு வகைகளில் விதை மற்றும் காய் உற்பத்தி, பூசணிக்காய், வெள்ளரி உள்ளிட்ட கொடிவகைக் காய்கறிகளின் மகசூலைப் பெருக்குகின்றன. மேலும் எண்ணெய் வித்துப் பயிர்களில் விதை உற்பத்தி, மருத்துவம் மற்றும் அலங்காரத் தாவரங்கள் ஆகியவற்றின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றது. இதன் மூலம் வழக்கத்தைவிட அதிக மகசூல், தரமான விளைபொருட்கள் கிடைப்பதால் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறுவதை உறுதி செய்கிறது. உலகளவில் மகரந்தச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இத்தகைய குறைந்த செலவிலான தேனீ வளர்ப்பு முயற்சிகள் அவசியம். இந்த முறைக்கு மிகக் குறைந்த முதலீடு மட்டுமே தேவைப்படுவதால், விவசாயிகள், தோட்டக்கலை ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்கள் எளிதில் பின்பற்றலாம் என ஆராய்ச்சி மைய பேராசிரியர் தெரிவித்தார்.

ஆக 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை