உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / விடுதி உரிமம் காலாவதியாகியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

விடுதி உரிமம் காலாவதியாகியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

விடுதி உரிமம் காலாவதியாகியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள் | Hostel fire accident | Hostel women executive arrest | madurai மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டராபாளையம் பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆசிரியைகள் பரிமளம், சரண்யா ஆகியோர் பலியாகினர். தீக்காயம் அடைந்த 3 பேர் தனியார் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர். திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விடுதியை கடந்த ஆண்டே காலி செய்யக்கோரி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. மாநகராட்சியினர் கண்டு கொள்ளாமல் விட்டதால் வழக்கம் போல் விடுதி செயல்பட்டு வந்தது. உரிமம் காலாவதியான நிலையில் விதிமீறி விடுதியை நடத்திய உரிமையாளர் இன்பா என்பவர் கைது செய்யப்பட்டார். தீ விபத்தில் விடுதியில் தங்கி இருந்த பெண்களின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஏராளமான பொருட்கள், துணிகள் தீயில் கருகினர்.

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை