கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை | Madurai | Immailum nanmai Tharuvar Temble | 1008 sangabhishekam
கார்த்திகை சோமவாரத்தையொட்டி கோயில்களில் சிவ பெருமான் சுவாமிக்கு சங்காபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதுரை மேலமாசி வீதியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கொடிமரம் அருகில் உள்ள நந்தி மண்டபத்தில் 1008 சங்காபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சங்காபிஷேகத்தில் 1008 சங்குகள் லிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு அதில் புனித நீர் ஊற்றி பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மங்கள வாத்தியங்கள் முழங்க பூஜை செய்த சங்குகளில் இருந்த புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.