முதியவரின் செயலை கண்டு அதிகாரிகள் பூரிப்பு
முதியவரின் செயலை கண்டு அதிகாரிகள் பூரிப்பு | Will worth ₹60 lakh for Indian Army | Elderly mans Donation for the Soilders | Madurai breath: நாட்டுக்காக வாழ்நாள் சேமிப்பை கொடுத்த 82 வயது இந்தியன் தாத்தா நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் அடிக்கும் தேச பக்தர் ₹60 லட்சம் வாழ்நாள் சேமிப்பை ராணுவத்திற்கு வழங்கிய கொடை வள்ளல் இந்தியன் தாத்தாவின மகத்தான கொடையால் அதிகாரிகள் பூரிப்பு ........ மதுரை ஹார்விபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா வயது 82. மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சுப்பையாவின் மனைவி உயிரிழந்தார். பிள்ளைகள் இல்லாத நிலையில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது வங்கி கணக்கில் உள்ள 30 லட்சம் ரூபாய் டெபாசிட் மற்றும் தனது பெயரில் உள்ள வங்கி லாக்கரில் 30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் வாழ்நாள் சேமிப்பாக வைத்திருந்தார். இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் நிசாந்த கிருஷ்ணாவிடம் தனது சேமிப்பான 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 30 லட்சம் மதிப்பு நகைக்கான உயில் ஆவணத்தை இந்திய ராணுவ வீரர்களுக்காக கொடி நாள் நிதியாக ஒப்படைத்தார். முதியவர் சுப்பையா கொடிநாள் நிதியாக 60 லட்சம் ரூபாய் உயில் ஆவணம் வழங்கியதை அங்கிருந்த அனைத்து அரசு அதிகாரிகளும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். இம்மாதம் செலவுக்காக வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையையும் கலெக்டரிடம் வழங்கினார். பத்துக் காசு கூட சேமிப்பு வைக்காமல் அனைத்தையும் இந்திய ராணுவத்திற்காக வழங்கிய கொடை வள்ளல், இந்தியன் தாத்தா என அன்போடு அழைக்கப்படும் சுப்பையா தாத்தாவிற்கு மக்கள் ராயல் சல்யூட் செலுத்தினர். ஒரு முதியவர் தான் சேர்த்து வைத்த மொத்தத்தையும் ராணுவத்திற்கு அளிக்க முன்வந்ததை பார்த்த அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருமிதம் கொண்டனர். மேலும், இவர் தனது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவ கல்லூரிக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.