உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தென்காசி புளியரை செக்போஸ்ட்டில் போலீசார் தீவிர வாகன சோதனை | Intensive vehicle testing | Thenkasi

தென்காசி புளியரை செக்போஸ்ட்டில் போலீசார் தீவிர வாகன சோதனை | Intensive vehicle testing | Thenkasi

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். அதில் கேரளாவின் தமிழக எல்லை மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை கேரளா குப்பை கிடங்காக மாற்றி வருகிறது. அதை திமுக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். ஜனவரி முதல் வாரத்தில் மக்களை திரட்டி இந்த மருத்துவக் கழிவுகளும் மற்றும் குப்பைகளையும் லாரிகளிலே ஏற்றி கேரள மாநிலத்தில் கொட்டப்படும். அதில் முதல் லாரியில் நானும் செல்வேன் என்றும் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் புளியரை செக்போஸ்ட் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தென்காசி போலீஸ் எஸ்பி சீனிவாசன் மேற்பார்வையில், டிஎஸ்பி தமிழ் இனியன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வாட்ச் டவரில் ஏறிய போலீசார் பைனாகுலர் மூலம் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் லாரிகளை கண்காணித்தனர். கேரளாவில் இருந்து தமிழக வரும் லாரிகளில் கழிவு பொருட்கள் ஏற்றி கொண்டு வரப்படுகின்றதா என தீவிர சோதனை செய்த பிறகு தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கின்றனர். புளியரையில் உள்ள எஸ் வளைவு முதல் புளியரை பேருந்து வரையிலும் 14 கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தி போலீசார் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை