விற்பனை இருக்கு; விலை இல்லையே | Farmers are frustrated that there is no price despite Jaggery sales
விற்பனை இருக்கு; விலை இல்லையே | Farmers are frustrated that there is no price despite Jaggery sales | Melur | Madurai மதுரை மாவட்டம் மேலூரில் இருவகையான கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றில் செங்கரும்பு சாப்பிடவும் ஆலை கரும்பு வெல்லம் தயாரிக்கவும் பயன்படுகிறது. பொங்கலையொட்டி மேலூர், கொட்டகுடி, வெள்ளலூர், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலூர் பகுதி விவசாயிகள் வெல்லம் விற்பனை துவங்கினாலும், விலை குறைவால் விரக்தியில் உள்ளனர். ஆலை கரும்பு நடவு செய்வது முதல் வெல்லம் தயாரிப்பது வரை ஏக்கருக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவு செய்கின்றனர். ஒரு ஏக்கர் கரும்பில் 3500 கிலோ வெல்லம் கிடைக்கிறது. கிலோ வெல்லம் 45 ரூபாய் 3500 கிலோ வெல்லம் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதால் நஷ்டம் அடைகின்றனர். கிலோ 60 ரூபாய் என அரசு உரிய விலையை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்தால் மட்டுமே கரும்பு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது. உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களை மானிய விலையில் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.