உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / கருப்புக்கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம் | Usilampatti | Protest against the film Jananayagan |

கருப்புக்கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம் | Usilampatti | Protest against the film Jananayagan |

கருப்புக்கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம் | Usilampatti | Protest against the film Jananayagan | Demonstration with black flags மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டி, கீரிபட்டி, செல்லம்பட்டி ஒன்றியம் நாட்டாமங்கலம் ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த கிராமங்களில் குறைவான எண்ணிக்கையில் பட்டியலின மக்கள் உள்ளனர். இதனால் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் போது பட்டியலின மக்கள் வேட்புமனு தாக்கல் செய்வதும், வாபஸ் பெறுவதும், வெற்றி பெற்றபின் வாபஸ் செய்வது என்ற நடைமுறை பல ஆண்டுகளாக தொடர்ந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு முயற்சியால் கடந்த 3 முறை பட்டியலின மக்கள் ஊராட்சித் தலைவர்களாக பதவி வகித்தனர். தவெக தலைவர் விஜய் நடித்து திரைக்கு வராமலே கோவை லோக்கல் சேனலில் ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தை பார்த்த பலர், பாப்பாபட்டி சம்பவத்தை மையமாக வைத்து தேர்தல் புறக்கணிப்பு நடந்தது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் புறக்கணிப்பிற்கான உண்மையான காரணத்தை சொல்லவில்லை. மேலும் பட்டியலின மக்களை பிற சமூகத்தினர் துன்புறுத்துவதாக காட்சிப்படுத்தி உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஜனநாயகன் ஹீரோ விஜய், இயக்குனர் உள்ளிட்டோர் பாப்பாபட்டி கிராமத்திற்கு வந்து பட்டியலின மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்பாபட்டி கிராமத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் என என வலியுறுத்தி கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை