இலவச சணல் பை தயாரிப்பு பயிற்சி துவக்க விழா | Jute Training celebration | NHDP | SDHS | FEDCROTN
இலவச சணல் பை தயாரிப்பு பயிற்சி துவக்க விழா | Jute Training celebration | NHDP | SDHS | FEDCROTN| Madurai அரசு கைவினைப்பொருட்கள் சேவை மையம், பெட்கிராட் நிறுவனம் சார்பில் மத்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இலவச சணல் பை தயாரிப்பு பயிற்சி துவக்க விழா மதுரையில் நடந்தது. பெட்கிராட் பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, சாராள் ரூபி முன்னிலை வகித்தனர். துாய்மை இந்தியாவை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தெருக்களை சுத்தம் செய்தனர். அரசு கைவினைப் பொருட்கள் சேவை மைய நாகர்கோவில் உதவி இயக்குநர் ரூப் சந்தர் பேசினார். அலுவலர் பிரதிக் ஷா உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் வழிமுறைகள் பற்றி விளக்கினார். மானியத்துடன் வங்கிக்கடன் பெறுவது குறித்து கதர் கிராம ஆணைய உதவி இயக்குநர் ரஹ்மான் கலிபர், மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் ஜெயா பேசினர். மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முதல்வர் கண்ணன், பூம்புகார் மேலாளர் சோலைராஜ், பயிற்சியாளர் சரஸ்வதி பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கண்ணன் நன்றி கூறினார்.