உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் ஏற்பாடு | Kanchi Maha Periyavar Jayanti Festival | Madurai

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் ஏற்பாடு | Kanchi Maha Periyavar Jayanti Festival | Madurai

காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் 131வது ஜெயந்தி விழா மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி நாராயணன் ரோட்டில் உள்ள எஸ்.எம்.கே திருமண மண்டபத்தில் ஜெயந்தி விழா காலை 8 மணிக்கு துவங்கியது. விழாவையொட்டி சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையில் 12 வேத விற்பன்னர்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் ஐம்பொன் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், மகன்யாசம், புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனைகள் நடைபெற்றன. ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

மே 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ