உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மேலும் ₹பல லட்சம் கந்து வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் | Kanthu Usury | Madurai crime

மேலும் ₹பல லட்சம் கந்து வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் | Kanthu Usury | Madurai crime

மதுரை புலிப்பாண்டி தெருவை சேர்ந்தவர் சத்யா வயது 48. மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வருகிறார். கீரைத்துறையை சேர்ந்தவர் மகாலட்சுமி, கந்து வட்டி தொழில் செய்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் சத்யாவின் கை எலும்பு முறிந்தது. சிகிச்சைக்காக மகாலட்சுமியிடம் 1 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கினார். மாதம் 40 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தி வந்தார். கடந்த மாதம் வட்டியில் சிறு தொகையை நிலுவை வைத்தார். வட்டியை பெண்டிங் இல்லாமல் தரக்கோரி மகாலட்சுமி டார்ச்சர் கொடுத்தார். போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடு. அங்கேயே வைத்து உன் குடலை உருவி கொலை செய்வேன். மதுரையே பாராட்டும் படி தரமான சம்பவம் செய்வேன், என சத்யாவை மிரட்டினார். சில நாட்களுக்கு முன் சத்யா வீட்டிற்கு சென்ற மகாலட்சுமி அவரை கடுமையாக தாக்கினார். ஒரு சில மணி நேரத்தில் வட்டியை கொடுக்க வேண்டும் என மிரட்டி விட்டு சென்றார். போலீஸ் துறைக்கே சவால் விடுக்கும் வகையில் கந்து வட்டி மகாலட்சுமி அபலை பெண் சத்யாவிற்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்து, கந்து வட்டி கொடுமையின் உச்சிக்கே சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சத்யா தெற்குவாசல் போலீசில் புகார் கூறினார். விசாரணை நடக்கிறது. மதுரையையே உலுக்கிய இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி