உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம்

இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம்

இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் / karate black belt at the age of 5 / madurai boy world achive மதுரை தபால் தந்தி நகர் மீனாட்சி நகரில் உள்ளது JAP ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட் கராத்தே சாதனை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மதுரை ஜெயின் வித்யாலயா பள்ளி மாணவன் அபூர்வன் புதிய சாதனை படைத்தார். ஐந்து வயது 5 மாதம் 28 நாட்களில் ஏற்பட்ட பழைய சாதனையை முறியடித்து, ஐந்து வயது 3 மாதங்களில் கராத்தே பிளாக் பெல்ட் பெற்று இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். அபூர்வனின் பெற்றோர் உலகு சுப்பிரமணியன் மற்றும் செளந்தர நாயகி கூறுகையில், கியோசி மாஸ்டர் செவந்த் டான் பிளாக் பெல்ட் (7th Dan Black Belt) அருள் பிரகாஷ், 5th Dan Black Belt சீகான் மாஸ்டர் கணேசன் ஆகியோர் அபூர்வனுக்கு சிறந்த பயிற்சி அளித்து, தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தை ஊட்டியதன் விளைவாக இந்த சாதனை நிகழ்ந்துள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறினர். நிகழ்ச்சியில் JAP ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள், பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள் முன்னிலையில் சிறுவன் அபூர்வனுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஜூலை 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !