உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மோடி ஆட்சியில் சாதாரண மக்களும் விமானத்தில் பயணிக்க முடிகிறது: கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு

மோடி ஆட்சியில் சாதாரண மக்களும் விமானத்தில் பயணிக்க முடிகிறது: கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு

மோடி ஆட்சியில் சாதாரண மக்களும் விமானத்தில் பயணிக்க முடிகிறது: கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு | Madurai | Connected with many parts of the world | Trade and investment are increasing and showing growth: Kinjarapu Ram Mohan Naidu மதுரையில் சர்வதேச விமான நிலையம் அறிவிக்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இந்திய விமான நிலையம் ஆணைய சேர்மன் விபின் குமார் வரவேற்றார். மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலை வகித்தார். ரூபாய் 94.37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தை மத்திய அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், விமான போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மொஹோல், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு இணை அமைச்சர் எல்.முருகன், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், மதுரை எம்பி சு.வெங்கடேசன் மற்றும் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை விமான நிலையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கூடுதல் விமானங்களை பாதுகாப்பாக இயக்கவும் 88 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கட்டிடத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார். மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் நன்றி கூறினார் . எம்பிக்கள் விருதுநகர் மாணிக்கம் தாகூர், மதுரை வெங்கடேசன், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, விமான போக்குவரத்து அமைச்சக இணைச் செயலாளர் ரூபினா அலி, தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேல், பாஜக மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் ராம் மோகன், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசி அனைவரையும் மகிழ வைத்தார். மேடைப்பேச்சு: ராம் மோகன் நாயுடு மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் 45:19 -46:51 47:15 - 49:48 மேடைப்பேச்சு: ராஜன் செல்லப்பா எம்எல்ஏ திருப்பரங்குன்றம் 17:04 -21:04 அரசியல் வேற்றுமைகளை கடந்து மதுரைக்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு மேலும் பல விரிவாக்கப்பணிகளில் ஈடுபட வேண்டும் என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேசினார். மேடைப்பேச்சு: மாணிக்கம் தாகூர் விருதுநகர் எம்பி 22:08 -25:17 அதனை தொடர்ந்து மதுரை எம்பி வெங்கடேசன் பேசுகையில், விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற பாடுபட்ட மத்திய அமைச்சர் மற்றும் விமான நிலையத்தை மேம்படுத்த குரல் கொடுத்த முன்னாள் எம்பிக்களுக்கு நன்றி கூறினார். மேடைப்பேச்சு: சு.வெங்கடேசன் எம்பி 27:51 - 30:25 மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேசுகையில், பிரதமர் தமிழக மக்கள் வளர்ச்சிக்காக 13லட்சம் கோடிகளை கொடுத்திருக்கிறார். மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு எந்த கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்தாலும் அதை நிறைவேற்றி கொடுப்பார். மேடைப்பேச்சு: எல்.முருகன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு இணை அமைச்சர் 32:10 -33:09 33:50 -34:26

மார் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி