வடமாநில மோசடி கும்பலை சேர்ந்த 2 பெண்கள் உட்பட ஏழு பேர் கைது | Farud gang arrested | Kodaikanal
கோவையை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சில நாட்களுக்கு முன் கொடைக்கானலுக்கு டூர் வந்தார். அவரை பிரயண்ட் பூங்கா அருகே சந்திந்த வட மாநில கும்பல் அவரிடம் கவர்ச்சிகரமான வார்த்தையில் பேசி வெளிநாடு டூர் சுற்றுலா செல்ல சம்பதிக்க வைத்தனர். இதற்காக நபருக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் வீதம் இரண்டு பேருக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஆன்லைனில் செலுத்த வைத்தனர். சில நாட்கள் கழித்து இவர்களை தொடர்பு கொண்ட போது அந்த கும்பல் கொடுத்த மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. வெப்சைட்டும் முடக்கப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜ்குமார் கொடைக்கானல் போலீசில் புகார் கொடுத்தார். தனிப்படை அமைத்து போலீசார் கும்பலை தேடினர். கொடைக்கானல் விடுதி ஒன்றில் தங்கியிருந்த வட மாநில மோசடி கும்பலை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை மடக்கினர். விசாரிக்கையில் ஹரியானாவை சேர்ந்த அணில் அஜய் மேக்சா, மும்பை தானேயை சேர்ந்த ஸ்ருதி, சாவாஜ், ஒசாமா, டில்லியை சேர்ந்த ராகுல்சா. ஹிமாச்சலை சேர்ந்த சிவா மற்றும் ஹரியானாவை சேர்ந்த தீபிகா ஆகியோர் ராஜ்குமாரிடம் ஆன்லைனில் பணம் கட்ட வைத்து மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. ஏழு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து லேப்டாப், 7 மொபைல் போன்கள், டேப் லட், போலி அடையாள அட்டை மற்றும் போலி பரிசு கூப்பன்களை பறிமுதல் செய்தனர். இக்கும்பல் ஏற்கனவே கொடைக்கானல் வந்த டூரிஸ்ட்டுகளிடம் வெளிநாட்டு ஆசை காட்டி ஆன்லைன் மூலம் 30 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டடு தெரியவந்தது. அதுகுறித்தும் விசாரணை நடக்கிறது.