உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / பிரிட்ஜ், வாஷிங் மெஷின்,LED டிவி பரிசு மழையில் வாசகர்கள் மகிழ்ச்சி| Dinamalar Mega kolam competition

பிரிட்ஜ், வாஷிங் மெஷின்,LED டிவி பரிசு மழையில் வாசகர்கள் மகிழ்ச்சி| Dinamalar Mega kolam competition

பிரிட்ஜ், வாஷிங் மெஷின்,LED டிவி பரிசு மழையில் வாசகர்கள் மகிழ்ச்சி| Dinamalar Mega kolam competition| Madurai தினமலர் சார்பில் மார்கழி மாதத்தை முன்னிட்டு மதுரை அரசரடி UC பள்ளி மைதானத்தில் பெண்களுக்கான மெகா கோலப்போட்டி நடத்தப்பட்டது தினமலருடன் இணைந்து போத்தீஸ், ஜெயபிரபா ஜுவல்லர்ஸ் மற்றும் சத்யா நிறுவனம் போட்டிகளை நடத்தினர். மதுரை பாண்டியன் அப்பளம், மனோ புக் சென்டர், SVS கடலை மாவு, ஆனந்தா and ஆனந்தா, மில்கா வொண்டர் (wonder) கேக் மற்றும் நவீன் மசாலா போட்டிகளை இணைந்து வழங்கினர் முன்பதிவு செய்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற போட்டியில் புள்ளி கோலம், 3d கோலம், நீர்க்கோலம், சமூக விழிப்புணர்வு கோலம், சுவாமி உருவங்களை வரைந்து பெண்கள் தங்கள் அபார திறமைகளை வெளிப்படுத்தினர். நடுவர்கள் குழு மதிப்பெண் அடிப்படையில் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். முதல் பரிசு பிரிட்ஜ், இரண்டாம் பரிசு வாஷிங் மெஷின், மூன்றாம் பரிசு LED டிவி, நான்காம் பரிசு வெட் கிரைண்டர் 5ஆம் பரிசு மிக்ஸி வழங்கப்பட்டது வெற்றி பெற்றவர்களுக்கு சத்யா நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் வில்சன், ஜெயபிரபா ஜுவல்லர்ஸ் MD தனசேகர், பாண்டியன் அப்பளம் MD திருமுருகன், ஆனந்தா and ஆனந்தா MD சுந்தரலிங்கம் மற்றும் மனோ புக் சென்டர் MD சதீஷ் பரிசுகளை வழங்கினர். மேலும் 50 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக குக்கர் கொடுக்கப்பட்டது போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தினமலர் 2024 இயர்புக் (year book) , பட்டம் - மாணவர்கள் பதிப்பு, மனோ புக் சென்டர் திருக்குறள் புத்தகம், மொபைல் ஸ்டாண்ட், ஜெயபிரபா ஜுவல்லர்ஸ் காலண்டர் , Svs கடலை மாவு பாக்கெட், உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய கிஃப்ட் பேக் கொடுக்கப்பட்டது. தினமலர் மெகா கோலப்போட்டியில் பங்கேற்ற வாசகர்கள் பரிசு மழையில் நனைந்து பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

ஜன 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி