உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஐகோர்ட் உத்தரவை மதிக்கும் திமுக அரசு?

ஐகோர்ட் உத்தரவை மதிக்கும் திமுக அரசு?

ஐகோர்ட் உத்தரவை மதிக்கும் திமுக அரசு? | Ilayangudi | Sirupalai Krishna Temple | Injustice against Hindus | DMK government சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ், கட்அவுட்டுகளை அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2 நாட்களாக அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய தலைவர்களின் பிளக்ஸ், கட் அவுட்டுகள், ஆர்ச்ச, கொடி மர பீடங்கள் உள்ளிட்டவற்றை வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி வருகின்றனர். இளையான்குடி சிறுபாலை கிருஷ்ணர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த கொடிமரம் மற்றும் கல்வெட்டு ஆகியவற்றை வருவாய் துறையினர் முன் அறிவிப்பின்றி இடித்து அகற்றினர். இதற்கு பக்தர்கள கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐகோர்ட் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசு அனுமதி மறுத்தது. ஐகோர்ட் உத்தரவை காலில் போட்டு மிதிக்கும் திமுக அரசு, கோயில் இடிப்பு நடவடிக்கையை மட்டும் ஐகோர்ட் உத்தரவு எனக்கூறி இடிப்பது எந்த வகையில் நியாயம். அதுவும் கோயில் பட்டா நிலத்தில் இருக்கும் கொடி மரத்தை இடித்தது ஹிந்துக்களுக்கு செய்யும் அநீதி. மாற்று மதத்தினர் வழிபாட்டு உரிமை மீது இந்த கோழை திமுக அரசு கை வைக்குமா என பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.

டிச 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை