கோயில் நிலம் கஞ்சா கசக்கும் கூடாரமானது | Madurai | Kalyana Sundareswarar Temple
கோயில் நிலம் கஞ்சா கசக்கும் கூடாரமானது | Madurai | Kalyana Sundareswarar Temple | Rowdy Activities Amid Overgrown Bushes மதுரை மாவட்டம் அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் உடனுறை பால மீனாம்பிகை கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் 7 சென்ட் நிலம் வள்ளானந்தபுரத்தில் உள்ளது. 30 கோடி ரூபாய் மதிப்பு நிலம் தனிநபர் கடந்த 25 வருடங்களாக ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறார். அதற்கான தொகையை இந்து அறநிலையத்துறைக்கு செலுத்தவில்லை. நிலம் முறையான பராமரிப்பு இல்லாமல் முட் புதர் மண்டியுள்ளது. சமூக விரோதிகளின் புகலிடமாக மாற்றப்பட்டுள்ளது. கோயில் நிலத்தை மீட்கவும், ஆக்கிரமிப்பாளரிடம் அபராதம் வசூலிக்க இந்து அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.