உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / புதுச்சேரி சரக்கு மதுரை டாஸ்மாக் கடைகளில் அமோக சேல்ஸ் | Madurai Crime

புதுச்சேரி சரக்கு மதுரை டாஸ்மாக் கடைகளில் அமோக சேல்ஸ் | Madurai Crime

புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில்களை வாங்கி மதுரையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்து வருவதாக மத்திய நுண்ணறிவுப் பிரிவு அமலாக்கத் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது புதுச்சேரியில் இருந்து மதுரை வந்த ஸ்கோடா காரை நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் 600 ஒரு லிட்டர் புதுச்சேரி மது பாட்டில்கள் பதுக்கி கடத்துவது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட விஜயனிடம் விசாரிக்கையில் ஒரு லிட்டர் பாட்டிலில் இருந்து குவாட்டர் பாட்டில்களில் மதுவை நிரப்பி அவனியாபுரம் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. விஜயன், அவனது கூட்டாளி சோலையழகுபுரம் முத்துப்பாண்டி, சுந்தர்ராஜன் ஆகியோரை மது விலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600 ஒரு லிட்டர் மது பாட்டில்கள், ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மற்றும் காரை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜன 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ