உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / கடை வாசலில் கார் நிறுத்தியதால் தகராறு | Madurai Crime

கடை வாசலில் கார் நிறுத்தியதால் தகராறு | Madurai Crime

மதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் தியாகராஜன் 75. இவர் திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்ய வந்தார். அப்போது கோயில் அருகே கடையையொட்டி காரை நிறுத்தினார். கடையை மறைத்தவாறு நிறுத்தப்பட்ட கார் மீது இரண்டு கடை உரிமையாளர்கள் குப்பைகளை காரில் வீசினர். இதனால் முதியவருக்கும் கடை உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கடை உரிமையாளர்கள் முதியவரை தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். கடை உரிமையாளர்கள் மீது முதியவர் போலீசில் புகார் கூறினார். விசாரணை நடத்திய போலீசார் கடை உரிமையாளர் ஒருவரை கைது செய்தனர். மற்றொருவர் தலைமறைவானார். போலீசார் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாகக்கூறி வணிகர் சங்கம் சார்பாக கடை உரிமையாளர்கள் கடை முன்பு கருப்பு கொடிகட்டி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். முதியோர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கடையடைப்பு வாபஸ் ஆனது.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ