கேட்பாரற்று கிடந்தவரை மீட்டு சிகிச்சையி்ல் சேர்த்த பாஜக மற்றும் ரெட்கிராஸ்
கேட்பாரற்று கிடந்தவரை மீட்டு சிகிச்சையி்ல் சேர்த்த பாஜக மற்றும் ரெட்கிராஸ் | Madurai | Discharged in Madurai Government Hospital Patient மதுரை விளாச்சேரியை சேர்ந்தவர் காட்டுமாரி வயது 50. சமையல் தொழிலாளி. கடந்த மாதம் டூவீலர் மோதியதில் இடுப்பு எலும்பு முறிந்தது. அவரை அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். கவனிக்க ஆளின்றி இருந்த காட்டுமாரி படுக்கையில் இருந்து எழ முடியாமல் தவித்தார். அவரை ஆஸ்பிடல் ஊழியர்கள் துரத்தி விட்டனர். உட்கார முடியாத நிலையில் பஸ் ஸ்டாப்பில் மயங்கி கிடந்தார். தகவறிந்த மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் பா.ஜ.க சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தலைவர் வக்கீல் முத்துக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். காட்டுமாரியின் பரிதாப நிலை குறித்து கலெக்டர் சங்கீதாவிடம் ஆதாரங்களுடன் கூறினார். கலெக்டர் உத்திரவின் பேரில் ரெட் கிராஸ் சங்க செயலாளர் ராஜ்குமார், வக்கீல் முத்துக்குமார் உள்ளிட்டோர் காட்டுமாரியை மீட்டு மீண்டும் அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.