/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரையில் தலை சுற்ற வைக்கும் மல்லிகை விலை | பிச்சி, முல்லை விலையும் எகிறியது | madurai
மதுரையில் தலை சுற்ற வைக்கும் மல்லிகை விலை | பிச்சி, முல்லை விலையும் எகிறியது | madurai
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பகுதியில் இருந்து பூ விற்பனைக்கு வருகிறது. தினமும் 50 டன் வரை விற்பனை நடக்கும். பொங்கலை முன்னிட்டு பூக்கள் இன்று கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை நேற்று ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. இன்று 3 ஆயிரம் ரூபாயாக எகிறியது. பிச்சி, முல்லை, மெட்ராஸ் மல்லி தலா 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இதே போல் சம்பங்கி, செவ்வந்தி 250, பட்டன் ரோஸ் 250, பன்னீர் ரோஸ் 300, செண்டு மல்லி 100, அரளிப்பூ 450 ரூபாய்க்கு விற்றது.
ஜன 13, 2024