பிரமதர் மோடியை ஆசீர்வாதம் செய்யும் தங்கத்தாய் ஹீரா பென் மோடி ஓவியம் வரைந்த மதுரை சிறுமி சகஸ்ரா
பிரமதர் மோடியை ஆசீர்வாதம் செய்யும் தங்கத்தாய் ஹீரா பென் மோடி ஓவியம் வரைந்த மதுரை சிறுமி சகஸ்ரா | Prime Ministers Mother | Blessings | Student Sagashra Art |Maduranthakam NDA Meeting | Amazing Art மதுரை கே. புதுார் மண்மலை மேட்டை சேர்ந்தவர் திலீபன் - கவிதா தம்பதி. இவர்களது மகள் சகஸ்ரா. 4 ம் வகுப்பு படிக்கிறார். திலீபன் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். கவிதா மொழியியல் கல்வி கற்றுத் தருகிறார். கவிதாவின் தங்கை அருள்மலர். ஓவியரான இவர் மூலம் ஓவியம் கற்றுக் கொண்டார் சகஸ்ரா. பிரதமர் மோடியின் தேசப்பற்று மீது சகஸ்ரா ஈர்க்கப்பட்டார். மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் திலீபன், கவிதா, சகஸ்ரா மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பிரதமர் பேசிக் கொண்டிருக்கும் போது மதுரை மீனாட்சி கோயில் பொற்றாமரைக் குளத்தில் அமர்ந்திருக்கும் பிரதமர் மோடிக்கு அவரது தாயார் ஹீரா பென் மோடி நெற்றியில் திலகமிட்டு ஆசீர்வாதம் செய்வது போல் தான் வரைந்த தத்ரூபமான ஓவியத்தை சகஸ்ரா கூட்டத்தில் துாக்கிக் காட்டினார். மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது சிறுமியின் ஓவியத்தை கவனித்த பிரதமர் மோடி தனது உதவியாளர் மூலம் அந்த ஓவியத்தை பெற்றுக் கொண்டார். டில்லி சென்றதும் சிறுமிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதுவதாக மேடையில் பிரதமர் மோடி அறிவித்து சிறுமி சகஸ்ராவை மகிழ்ச்சியின் வெள்ளத்தில் ஆழ்த்தினார்.