/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் ஏற்பாடு | Maha Periyavar Utsavam | Madurai
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் ஏற்பாடு | Maha Periyavar Utsavam | Madurai
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அனுஷ உற்சவம் எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி மகா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், விபூதி, இளநீர் உட்பட பல்வேறு அபிஷேக ஆராதனைகள், புஷ்பாஞ்சலி மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வினை சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்தி வைத்தனர் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று மகா பெரியவரை தரிசனம் செய்தனர். அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
ஜூன் 21, 2024