உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஆசிரியை, டெய்லர் மீது போக்சோ பாய்ந்தது | Madurai | Male tailor sexually harasses student

ஆசிரியை, டெய்லர் மீது போக்சோ பாய்ந்தது | Madurai | Male tailor sexually harasses student

ஆசிரியை, டெய்லர் மீது போக்சோ பாய்ந்தது / Madurai / Male tailor sexually harasses student மதுரை எம் கே புரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளுக்கு சீருடை தைக்க ஏற்பாடு செய்தனர். அளவு எடுக்கும் பணியில் ஆண் மற்றும் பெண் டெய்லர்கள் அழைத்து வரப்பட்டனர். பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், மாணவிகளுக்கு அளவெடுக்க ஆண் டெய்லர் எதற்கு, தான் வேறொரு பள்ளிக்கு செல்லும் நிலையில் சீருடை தேவையில்லை என்றார். எனினும் ஆசிரியை ஒருவர் மாணவியை கட்டாயப்படுத்தி ஆண் டெய்லர் மூலம் அந்த மாணவிக்கு அளவெடுக்க வைத்தார். அளவெடுக்கும் போது மாணவியிடம் டெய்லர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி மகளிர் போலீசில் புகார் கூறினார். விசாரணை நடத்திய போலீசார் டெய்லர் மற்றும் ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டி.ஒய்.ஃஎப்.ஐ. (dyfi) மாணவ, மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அவர்களில் 15 க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக் கட்டாக துாக்கி கைது செய்தனர். மாணவிக்கு டெய்லர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மார் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை