உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / விண்ணை பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் |Sabarimala | Mandala Pooja begins at Sabarimala

விண்ணை பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் |Sabarimala | Mandala Pooja begins at Sabarimala

விண்ணை பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் |Sabarimala | Mandala Pooja begins at Sabarimala கார்த்திகை 1ம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும் பூஜை சபரிமலையில் ஒரு மண்டல பூஜை காலமாகும். நேற்று மாலை 5 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து பூஜைகளை தொடங்கி வைத்தார். கூடியிருந்த பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர். கோயிலை வலம் வந்த மேல் சாந்தி 18 படிகள் வழியாக வந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தார். நேற்று வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை இரவு 11மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு புதிய மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகன ரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி, நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கோயில் முன்புறமுள்ள மண்டபத்தில் கணபதி ஹோமமும் விழக்கமான பூஜைகளும் நடைபெற்றது. தினமும் ஆன்லைன் முன்பதிவில் 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங்கில் 20 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

நவ 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ