மே 8ல் மீனாட்சி - சொக்கர் திருக்கல்யாணம்|Meenakshi sokkanadhar Chithirai utsav kodiyetram| Madurai
மே 8ல் மீனாட்சி - சொக்கர் திருக்கல்யாணம் /Meenakshi sokkanadhar Chithirai utsav kodiyetram/ Madurai மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். மேளதாளம் இசைக்க சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. வேத மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள், நந்தி வாகனம் பொறிக்கப்பட்ட கொடிபட்டதை தங்கக்கொடி மரத்தில் ஏற்றினர். விழாவையொட்டி சுவாமி, அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா புறப்பாடு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி பட்டாபிஷேகம் மே 6ம் தேதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8ம் தேதி மற்றும் தேரோட்டம் மே 9 ம் தேதி நடைபெறும்.