சித்திரை வீதிகள் வலம் வந்த அம்மனை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் | Madurai | Meenakshi Sundareswara
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மார்கழி திருவிழாவையொட்டி மீனாட்சிக்கு தைல காப்பு உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தைலகாப்பு உற்சவம் 4 ம் தேதி முதல் 13ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். தினமும் மாலையில் கோயில் எதிரே உள்ள புதுமண்டபத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி அம்மனுக்கு தைலகாப்பு மற்றும் தீபாராதனை நடைபெறும். தைலகாப்பு உற்சவத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி அம்மன் புதுமண்டபத்தில் இருந்து புறப்பாடாகி 4 சித்திரை வீதிகள் சுற்றி கோயிலை வந்தடைந்தது. ரோட்டின் இருபுறமும் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 12ம் தேதி கனக தண்டியலில் அம்மன் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் வலம் வரும் நிகழ்வும், 13ம் தேதி பொன்னூஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வரும் நிகழ்வும் நடைபெறும். கோயிலில் துவங்கி நடைபெற்று வரும் எண்ணெய் காப்பு மற்றும் திருவெண்பா உற்சவ நாட்களில் உபய தங்க ரத உலா, உபய திருக்கல்யாணம் மற்றும் வைர கிரீடம் சாத்துதல் ஆகிய சேவைகள் நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.