உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு | VIP Darshan to Ardhamandapam | Meenakshi Amman Temple

ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு | VIP Darshan to Ardhamandapam | Meenakshi Amman Temple

ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு / VIP Darshan to Ardhamandapam / Meenakshi Amman Temple / Hindu organization protest / Madurai மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அம்மன் கருவறை முன் உள்ள நடைமேடையிலும், அதற்கு கீழ் உள்ள பகுதியிலும் வி.ஐ.பி.,க்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அம்மனை அர்த்த மண்டபத்தில் எட்டும் தூரத்தில் தரிசனம் செய்ய வேண்டும் என, ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர் முயற்சித்து, கோயில் நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் மீனாட்சி அம்மன் கோவில் கருவறை முன் உள்ள சிறிய அர்த்த மண்டபத்தில் வி.ஐ.பி.,க்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்க ஏற்பாடு நடக்கிறது. இதனால் அம்மன் சிலைக்கு பாதுகாப்பு இருக்காது என, ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனா். அப்படி அனுமதிக்கும் பட்சத்தில் அம்மன் சிலைக்கும், கோயிலுக்கும் பாதுகாப்பு இருக்காது என, ஹிந்து அமைப்புகள் எச்சரிக்கின்றன. PTR ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனது தற்போதைய அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணியின் கணவரும், அமைச்சர் தியாகராஜனின் தந்தையுமான பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், மீனாட்சி அம்மனின் தீவிர பக்தர். அவர் சபாநாயகராக இருந்த போது அர்த்த மண்டபத்தில் பக்தர்களை அனுமதிக்க முயற்சி எடுத்தார். நிர்வாக காரணங்களாலும், பாதுகாப்பு காரணங்களாலும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. பின் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக மதுரைக்கு வரும்போது மீனாட்சியை அர்த்த மண்டபத்தில் நின்று தான் தரிசிப்பேன் என, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தார். அதிகாரிகளும் அதற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் வரும் போது காலமானார். இதனால் கடைசி வரை அவரது ஆசை நிறைவேறவில்லை என தி.மு.க.,வினர் ஆதங்கம் தெரிவித்தனர்.

ஜூன் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ