உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை வந்த இங்கிலாந்து மேயர் குழுவினருக்கு விவசாய சங்கத்தினர் வரவேற்பு

மதுரை வந்த இங்கிலாந்து மேயர் குழுவினருக்கு விவசாய சங்கத்தினர் வரவேற்பு

மதுரை வந்த இங்கிலாந்து மேயர் குழுவினருக்கு விவசாய சங்கத்தினர் வரவேற்பு | Melur | A delegation of mayors from England visits Madurai | Important agreement with the United Kingdom தமிழகத்தின் தென் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும், முல்லை பெரியாறு அணையை கட்டியவர் ஆங்கிலேய பொறியாளர் ஜான் பென்னி குயிக். இங்கிலாந்து நாட்டின் கேம்பரலீ நகரத்தையும் மதுரையையும் இணைக்கும் கலாச்சார இணைப்பு நிகழ்ச்சிக்காக மேயர் லுாயிஸ் ஆஸ்பெரி தலைமையிலான குழு மதுரை வந்துள்ளது. விவசாய சங்கத்தின் சார்பில் அவர்களை வரவேற்றனர். கலாச்சார நிகழ்ச்சிக்கு விவசாய சங்க தலைவர் முருகன் தலைமை வகித்தார். செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். மேலுார் பென்னிகுயி்க் பஸ் ஸ்டாண்டு முன்பு விவசாய சங்கத்தின் சார்பில் பென்னி்குவிக் உருவ படத்திற்கு சர்ரேத் நகரின் மேயர் லுாயிஸ் ஆஸ்பெரி, துணை மேயர் கிளிப் பென்னட், கவுன்சிலர் ஆலன் ஆஸ்பெரி, மற்றும் அவரது குழுவை சேர்ந்த சாரோன் ஆன் பில்லிங், நிக்கோலா கோல்ஸ், மாத்யூ ஸ்லீப் உள்ளிட்டோர் மலர் துாவி, கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினர். சங்கத்தின் சார்பில் பஸ் ஸ்டாண்டு முன்பு பென்னிகுயிக் சிலையை நிறுவ கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து விவசாய சங்கத்தின் சார்பில் போதிதர்மா தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் பயிற்சியாளர் செந்தில் போஜராஜன் தலைமையில் சிலம்பாட்டமும், ஜல்லிகட்டு காளையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சேவுகமூர்த்தி, மணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜன 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ