தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வீடு வீடாக விசாரணை
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வீடு வீடாக விசாரணை | Nilakottai | ADMK members distributed model bank cheque tokens திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் வங்கி செக் போன்று அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய்,10 ஆயிரம் ரூபாய் போலி செக் ஸ்லீப்கள் இரவோடு இரவாக அதிமுகவினர் விநியோகம் செய்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. போலி செக் ஸ்லீப் வினியோகம் செய்த பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று விசாரணை செய்தனர். அந்தப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஸ்லீப் வழங்கியது யார், எதற்காக ஸ்லீப் வழங்கப்பட்டது என விசாரணை நடத்தினர். அதிமுகவினர் வழங்கிய போலி செக் ஸ்லீப்பில் இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக தலைமையினான தேசிய ஜனநாயக கூட்டணி எனவும், காசோலையில் பெயர் எழுதும் இடத்தில் தமிழக குடும்பங்கள் அனைவருக்கும் எனவும், 2.6.2026 என தேதியிட்டு குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. வங்கி பெயர் குறிப்பிடாமல் தயாரிக்கப்பட்டுள்ள போலி செக் ஸ்லீப்பின் பின் பகுதியில், பழனிச்சாமி, ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்களுடன், நல்லாட்சினா எடப்பாடிதான், வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கு என, அச்சிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி போலி ஸ்லீப் விநியோகம் செய்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுகவினர் தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளனர்.