/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் | Muppudathi Amman Temple Festival
தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் | Muppudathi Amman Temple Festival
தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஆரியநல்லூர் தெருவில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கொடை நாளன்று குற்றாலத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விரதமிருந்த பெண்களின் தீச்சட்டி மற்றும் முளைப்பாரி எ ஊர்வலம் முப்புடாதி அம்மன் கோயிலில் நிறைவடைந்தது. செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மே 01, 2024