உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / சாரல் மலையில் வரிசையில் காப்பு கட்ட காத்திருந்த பக்தர்கள்

சாரல் மலையில் வரிசையில் காப்பு கட்ட காத்திருந்த பக்தர்கள்

சாரல் மலையில் வரிசையில் காப்பு கட்ட காத்திருந்த பக்தர்கள் / Karaikudi / Muthumariamman Temple Maasi Panguni Flag Hoisting சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி பங்குனி பால்குட திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்திற்கு புனித நீர் ஊற்றி பால், சந்தனம் ,பண்ணிர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. ஒம் சக்தி, ஒம் சக்தி என பக்தர்கள் பக்தி பரவச கோஷத்துடன் சிங்கம் சித்திரம் வரையப்பட்ட கொடியேற்றப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோயில் வெளிபுற வளாகத்தில் மழையில் நனைந்தபடி நீண்ட வரிசையில் காத்திருந்து காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். பால்குடம், அக்கினி சட்டி, அழகு குத்துதல், தீ மிதித்தல் என மாசி பங்குனி பால்குட திருவிழா 7 நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை