உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தினமலர், ஸ்டாரெட்ஸ் வழங்கிய நீட் மாதிரி தேர்வு | Dinamalar, Starets | NEET Model Exam 2026

தினமலர், ஸ்டாரெட்ஸ் வழங்கிய நீட் மாதிரி தேர்வு | Dinamalar, Starets | NEET Model Exam 2026

தினமலர், ஸ்டாரெட்ஸ் வழங்கிய நீட் மாதிரி தேர்வு | Dinamalar, Starets | NEET Model Exam 2026 | Subbalakshmi Lakshmipathy College of Science | Madurai தினமலர் மற்றும் ஸ்டாரெஸ்ட் (Starests) இணைந்து வழங்கிய நீட் மாதிரி தேர்வு மதுரை அருப்புக்கோட்டை ரோடு டிவிஆர் நகரில் உள்ள சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் இன்று நடந்தது. இந்த நீட் மாதிரி தேர்வு தங்களை சுயமாக பரிசோதித்துக் கொள்ளும் வகையில் இருந்ததாக டாக்டர் கனவு மாணவர்கள் பெருமிதத்துடன் கூறினர். மதுரையில் தினமலர், ஸ்டாரெட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு அருப்புக்கோட்டை ரோடு டிவிஆர் நகரில் உள்ள சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் இன்று நடைபெற்றது. டாக்டர் ஆகும் லட்சியம் கொண்ட மாணவர்களுக்காக தினமலர் சார்பில் ஆண்டுதோறும் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு தேசிய தேர்வு முகமை என். டி.ஏ. சார்பில் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3 ல் நடக்கிறது. இதையொட்டி நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி, தினமலர் நாளிதழில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதில் தேர்வில் கலந்து கொள்ள விரும்பிய 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்திருந்தனர். நீட் மாதிரி தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளும் வகையில் தினமலர் மற்றும் ஸ்டாரெட்ஸ் வழங்கிய நீட் மாதிரி தேர்வு இருந்ததாக பெருமிதத்துடன் கூறினர். முன்னதாக தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 9:45 மணிக்கே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வந்து அமர்ந்தனர். மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட்டது. அரசு நடத்தும் நீட் நுழைவுத் தேர்வுக்கு இணையாக கல்வி நிபுணர்கள் மூலம் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு இத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு நீட் மீதான பயத்தை முற்றிலும் நீக்குவதாக இருந்தாக தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் கூறினர். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நீட் மாதிரி தேர்வு சுலபமாகவும், அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய வகையில் இத்தேர்வு அமைந்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். இன்று நடைபெற்ற தினமலர் மற்றும் ஸ்டாரெஸ்ட் நீட் மாதிரி தேர்வுக்கான முடிவுகள் வரும் 28ஆம் தேதி வெளியிடப்படும். முதல் டாப் 15 நபர்கள் தேர்வு முடிவு தினமலர் நாளிதழ் மற்ற மாணவர்களின் தேர்வு முடிவு பட்டியல் ஸ்டாரெட்ஸ் இணையதளத்தில் வெளியாகும்.

ஏப் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை